மியான்மர் ஜேட் சுரங்கத்தில் நிலச்சரிவு – 50 பேர் பலி..!

0

மியான்மர் நாட்டில் ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நாங்கள் இன்னும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம், ”என்று நாட்டின் தீயணைப்பு சேவை பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

சுரங்க விபத்து:

வடக்கு மியான்மரின் கச்சின் மாநிலத்தின் ஜேட் நிறைந்த ஹபகாந்த் பகுதியில் சுரங்கத் தொழிலாளர்கள் ரத்தின கற்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது, பலத்த மழையால் ஏற்பட்ட “சேற்று அலை” நிலச்சரிவை உண்டாக்கியதாக அந்நாட்டு தீயணைப்புத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் மீட்புப் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 50 இறந்த உடல்களை கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாவில் சீன செயலிகள் தடைக்கு அமெரிக்கா ஆதரவு..!

மியான்மரின் மோசமாக ஒழுங்குபடுத்தப்பட்ட சுரங்கங்களில் கொடிய நிலச்சரிவுகள் மற்றும் பிற விபத்துக்கள் ஏற்படுத்துவது பொதுவானது தான் என பொதுமக்கள் கூறுகின்றனர். ஆனால் ஏற்கனவே கொரோனவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ள நிலையில், தற்போது இயற்கைப் பேரிடர்களும் மக்கள் உயிர்களை காவு வாங்கி வருவது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here