இந்தியாவில் சீன செயலிகள் தடைக்கு அமெரிக்கா ஆதரவு..!

0

சீன நிறுவனங்களின் 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு அமெரிக்காவில் ஆதரவு அதிகரித்துள்ளது.

சீன செயலிகளுக்கு தடை..!

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். சீனப் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

china apps
china apps

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் டிக்டாக், ஷேர்இட், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் போன் செயலிகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது. இந்த செயலிகள் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு, ராணுவம் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்காவில் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here