விஷாலுடன் கை கோர்த்த தெலுங்கு காமெடி நடிகர்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

0
விஷாலுடன் கை கோர்த்த தெலுங்கு காமெடி நடிகர்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!
விஷாலுடன் கை கோர்த்த தெலுங்கு காமெடி நடிகர்.., படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பு!!

நடிகர் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்து இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

மார்க் ஆண்டனி:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான்  நடிகர்  விஷால். இவர் சண்டக்கோழி, செல்லமே, திமிரு மற்றும் தாமிரபரணி போன்ற  வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடித்த லத்தி திரைப்படம்  திரையரங்கில் ரிலீஸ் ஆகி கலவையான  விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம், வெளியே வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் மண்ணைக் கவ்வியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் படைப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் விஷால்  பிஸியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்க, எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் படத்தால் வந்த புது சிக்கல்.., மணிரத்னம் மீது வழக்கு !!

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும்  இந்தி என மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி  திரைப்படத்தில் தெலுங்கு காமெடி நடிகரான சுனில் இணைந்துள்ளதாக நடிகர் விஷால் தனது instagram பக்கத்தில்  அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சுனில் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது  நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில்  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here