நரம்புகள் முறுக்கேற இந்த 9 சைவ உணவுகள் அவசியம்.., முழு விபரம் உள்ளே!!

0
நரம்புகள் முறுக்கேற இந்த 9 சைவ உணவுகள் அவசியம்.., முழு விபரம் உள்ளே!!
நரம்புகள் முறுக்கேற இந்த 9 சைவ உணவுகள் அவசியம்.., முழு விபரம் உள்ளே!!

நம் உடல் ஆரோக்கியத்திற்கு சில ஊட்டச்சத்துக்களின் தேவை அவசியமாக உள்ளது. அதாவது பழங்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களின் ஆயுட்காலம் 100 வயதை தாண்டி இருந்தது. ஆனால் இந்த காலத்தில் 40 வயதை கடப்பதே கடினமாக இருக்கிறது. இதற்கு ஆரோக்கியமற்ற உணவு முறை, சத்துக் குறைவு போன்றவை தான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இந்த நரம்பு தளர்ச்சி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த சத்துக் குறைபாட்டை சரிசெய்யும் 9 வகையான சைவ உணவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

  • அதாவது சிட்ரஸ் அமிலத்திற்கு நரம்புகளை பாதுகாக்கும் தன்மை உள்ளதாம். இதனால் சாத்துக்குடி, எலுமிச்சை, கொடை ஆரஞ்சு போன்ற பழங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
  • மேலும் நம் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிதைவுகளால் நமக்கு மறதி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை குணப்படுத்த மற்றும் தடுக்க ப்ரோக்கோலியை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.
  • இதுபோக சத்துக்களை அள்ளி கொடுக்கும் பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி கீரைகளை சாப்பிட்டு வருவதால் நரம்புகள் வலு பெரும்.
  • மேலும் தேனீரில் இலவங்கத்தை போட்டு குடித்து வருவதன் மூலமும் நம் நரம்பை உறுதி படுத்தலாம்.
  • இது தவிர்த்து இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் அவகேடோ பழம் நரம்பு மண்டலத்திற்கு ஆரோக்கியம் தருமாம்.
  • பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகளில் வைட்டமின் c நிறைந்திருப்பதால் இவை நம் நரம்பு மண்டலத்தின் சேதத்தை சரி செய்யுமாம்.
  • இதுபோக தினையை உணவில் சேர்த்துக்கொள்வதால் நரம்பு வலுப் பெறுகிறது
  • மேலும் ப்ளூபெர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால் அவை நம்மை நரம்பு மண்டல பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.
  • அதோடு பூசணி பழத்தின் விதைகளில் இரும்பு சத்து அதிகம் இருப்பதால் நம் நரம்பை பாதுகாக்க உதவும்.

ஜிலுஜிலுன்னு கிக்கேத்தும் அழகில் நதியாவின் மகள் ஜனா.., எவ்ளோ கியூட்டு?? ஸ்தம்பித்த இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here