இந்தியாவில் 28 பேருக்கு கோவிட் 19 பாசிட்டிவ் – கொரோனா பரவாமல் தடுக்க அரசு தீவிரம்..!

0

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

3000 க்கு மேல் பலி..!

சீனாவின் ஹவான் நகரின் ஒரு இறைச்சி கடையில் இருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸினால் உலகம் முழுவதும் இதுவரை 3100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். மேலும் இதுவரை 80,000 பேர் கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு உள்ளனர். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிலும் பலநாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்தியாவில் இதுவரை வைரஸின் தாக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இதன் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது.

28 பேருக்கு கொரோனா..!

தற்போது இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அதைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கி உள்ளது. விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய அரசு இதெற்கென 2500 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here