பிக் பாஸ் பாலாஜிக்கு கிடைச்ச அங்கீகாரத்தை பாருங்க – அசத்திட்டீங்க போங்க!!

0

பிக் பாஸ் சீசன் 4 மூலம் திரையில் அறிமுகமானவர் தான் பாலாஜி முருகதாஸ். தற்போது இவரது உழைப்பிற்கு ஓர் அருமையான அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பாலாஜி:

தொழிலதிபர், நடிகர், சூப்பர் மாடல் என்று பல அவதாரங்களை எடுத்தவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர் கடந்த 2018ம் ஆண்டு மிஸ்டர் இன்டர்நெஷனல் விருதினை பெற்றார். இருந்தும் மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போக முடிவு செய்து அதன் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் இவர் எதிர்பார்த்த வரவேற்பை கொடுத்தது என்று தான் சொல்லவேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனித்துவமாக காணப்பட்டார் பாலாஜி. இவரது முரட்டுத்தனம் மற்றும் கேம் பிளான் மக்களால் கவரப்பட்டது. ஒரு கட்டத்தில் இவர் தான் பிக் பாஸ் 4 டைட்டிலை கைப்பற்றுவார் என்று மக்கள் அனைவராலும் நம்பப்பட்டது. அந்த அளவிற்கு இவரது பங்களிப்பு அந்த நிகழ்ச்சியில் அதிகமாகவே இருந்தது.

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம் – குவியும் பாராட்டுக்கள்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு இவர் வெளியே வந்த பின்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் பாலாஜியின் கடின உழைப்பிற்கு தற்போது ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த 2020ம் ஆண்டிற்கான விரும்பத்தக்க ஆண்மகன் விருதினை தற்போது பாலாஜி முருகதாஸ் பெற்றுள்ளார். விருதினை பெற்ற பாலாஜிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here