“வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” –  கேரளா மருத்துவர்களுக்கு சல்யூட்!!!

0

கோவிட் -19 சோதனைக்காக 8 கி.மீ. தூரம் உள்ள ஆற்றைக் கடந்து சென்ற கேரளா மருத்துவர்கள் குழு.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

கேரளா மருத்துவர்களுக்கு சல்யூட்:

கேரளாவில் உள்ள கிராமத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு காய்ச்சல் வந்ததை அடுத்து; அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. எனவே ஒரு மருத்துவக் குழு ஆற்றைக் கடந்து; காடுகளில் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் கேரளாவில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தை அடைந்தனர்.

முருகுலா கிராமத்துக்கான பயணம் எளிதானது அல்ல. அந்த வகையில் மூன்று மருத்துவர்கள் மற்றும் ஒரு டிரைவர் அடங்கிய குழு, பவானி பூஜா ஆற்றின் கரை வரை தனது வாகனத்தில் சென்று; அதன்பிறகு நடந்து சென்று ஆற்றை கடந்தனர்.

சனிக்கிழமை காலை ஆற்றைக் கடந்ததும்; அட்டப்பாடி வனப்பகுதிக்குள் மேலும் எட்டு கி.மீ. நடந்தும்; கிராமத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு  கோவிட் -19க்கு ஆன்டிஜென் சோதனைகளை விரைவாக மேற்கொண்டனர், அவர்களில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் புதூர் டி.டி.சி.க்கு மாற்றப்பட்டனர்.

இந்த குழுவில் இருந்த டாக்டர் சுகன்யா, சுகாதார ஆய்வாளர் டாக்டர் சுனில் வாசு, ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் டாக்டர் ஷைஜ் மற்றும் டிரைவர் சஜேஷ் ஆகியோரின்  பணிக்கு , கேரள சுகாதார அமைச்சர் வீணா பாராட்டு தெரிவித்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here