மீண்டும் உயர்வு.. உச்சம் தொடும் கொரோனா தொற்று.. தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது…!

0

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 2,08,921 பேருக்கு கோவிட் -19 தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் 4,157 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2,71,57,795 ஐ எட்டியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,11,388 ஆக உயர்ந்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா கொரோனா இரண்டாவது அலையை எப்படி வெல்லப் போகிறது என்ற மலைப்பு மக்கள் மனதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 500 என்ற அளவிலும், உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தது. ஆனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த அளவிற்கு கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.

மேலும் நாட்டில் நிலவி வரும் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மற்ற நாடுகளிடம் இந்தியா கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தும், அன்றாடம் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையால் இந்தியாவில் தடுப்பு மருந்திற்காக மக்கள் நாள் கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டி பதிவாகியுள்ளதாக வெளியான தகவல் மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here