ஊரடங்கை மீறியதால் 1.97 லட்சம் பேர் கைது – தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை..!

0

கொரோனவால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் ஏப்ரல் 14 இல் முடிவடைவதாக இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரிக்கவே மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையை தவிர எதற்கும் வெளியே வர கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது.

வழக்குப்பதிவு

ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

நீண்ட இடைவேளைக்கு பின் பிரஸ் மீட் நடத்திய விஜயபாஸ்கர் – இது தான் காரணமா.?

Police brutality competes with coronavirus as cops lathi-charge ...

இவ்வாறு தமிழகம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி இன்று(16-4-20) காலை 6 மணி வரை மொத்தம் 1 லட்சத்து 84,748 வழக்குகளைப் பதிவு செய்து 1 லட்சத்து 97,536 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 1 லட்சத்து 56,314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.82 லட்சத்து 32,644 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

8,795 people booked in Tamil Nadu for violating COVID-19 lockdown ...

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி புதன்கிழமை காலை 6 மணி வரை 1,012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 589 இரு சக்கர வாகனங்கள்,36 காா்கள், 1 கனரக வாகனம்,92 இதர வாகனங்கள் என மொத்தம் 718 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Chennai cops harass, beat up residents stepping out to buy ...

ஊரடங்குக்குப் பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருவதால், ஊரடங்கை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவா்களது வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் முடிவு செய்துள்ளனா்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here