நீண்ட இடைவேளைக்கு பின் பிரஸ் மீட் நடத்திய விஜயபாஸ்கர் – இது தான் காரணமா.?

0

கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து விபரங்களையும் மக்களிடம் எடுத்துரைப்பவர் தான் பீலா ராஜேஷ். ஆனால் நேற்று மாலை 2 வாரங்களுக்கு பிறகு மக்கள் முன் பேசினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். பெரும்பாலும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கொரோனாவை பற்றிய விபரங்களை பற்றி தெரிவிக்க பிரஸ் மீட் நடத்துவர். ஆனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜயபாஸ்கர் பிரஸ் மீட் நடத்தினர்.

பிரஸ் மீட்

நேற்று மறுபடி எப்படி விஜயபாஸ்கர் வருகை தந்தார், ஏன் வருகை தந்தார் என்பது பலரது கேள்வியாக இருந்தது. பீலா ராஜேஷ் பின்னால் நின்று கொண்டிருந்தார். இதற்கான விடையை விஜயபாஸ்கர் அந்த பிரஸ் மீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

விஜயபாஸ்கர்

இந்த பிரஸ் மீட்டில் விஜயபாஸ்கர் கூறியதாவது, “சமீபத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், அரசு இன்னும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு நான் பதில் அளிக்க விரும்புகிறேன். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய காலத்திலேயே, உயர் வல்லுநர்களை அழைத்து ஆலோசனை நடத்தினோம்.

C Vijayabaskar: RK Nagar By-Polls: After I-T raids, MK Stalin ...

வரக்கூடிய விளைவுகளை கணித்து, இது எளிதாக வேகமாகப் பரவக் கூடியது என்பதை அறிந்து வைத்திருந்தோம். இதனால்தான் சட்டசபையிலேயே கூறினோம், இது மின்னல் வேகத்தில் பரவக்கூடிய நோய் என்று. அதற்கு ஏற்ப அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டது. இந்தியாவில் கொரோனா நோய் இல்லாத காலகட்டத்தில், அதாவது ஜனவரி மாதமே, மருந்து உற்பத்தியாளர்களை எல்லாம் அழைத்து, நிதி ஒதுக்கீடு செய்து, தேவையான மருந்துகளை முன்கூட்டியே கொள்முதல் செய்து விட்டோம். எனவேதான், எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இந்த நோயை எதிர்த்து அணுகி வருகிறோம்.

Coronavirus threat: Fever patient put up in isolation ward in ...

இந்தியாவில், கொரோனா நோய் பரவல் ஆரம்பித்தது, ஜனவரி 30 ஆம் தேதிதான். கேரளாவில் முதன்முறையாக நோயாளி கண்டறியப்பட்டார். அதற்குப் பிறகு இரண்டாவது முறையாக, மருத்துவ உபகரணங்கள், கொள்முதலை, மிகப்பெரிய அளவுக்கு செய்தோம். மூன்று அடுக்கு முக கவசம், n95 முகக் கவசம் உள்ளிட்ட அனைத்தையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து விட்டோம். 204.85 கோடி ரூபாய் மதிப்புக்கு பிறகு பெரிய அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

No sign of Coronavirus infection in TamilNadu- Health Minister ...

தமிழகத்தைப் பொறுத்த அளவில் மூன்றடுக்கு மாஸ்க், n95 மாஸ்க், மருத்துவர்களுக்கு தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தங்குதடையில்லாமல் கொடுக்கப்பட்டு வருகிறது.தேவையான அளவுக்கு நம்மிடம் உபகரணங்கள் இருப்பு இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு இதை நான் பதிலாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.” இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

AIADMK government caught in web of corruption

தமிழகத்தில், கொரோனா பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் பிரஸ்மீட் செய்யாமல் சுகாதாரத்துறை செயலாளரை வைத்து பிரஸ் மீட் செய்வது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் நேரடியாக பதிலளித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here