அரசு நிவாரணங்களில் டிரம்ப் பெயர் பொறிக்க உத்தரவு – அமெரிக்கர்கள் கொந்தளிப்பு..!

0

நிதியுதவிக்கான காசோலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என நேற்று இரவு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கடும் பாதிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா மிகப்பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் இதுவரை 6.41 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 28,399 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் தடுப்பதற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதலால் அமெரிக்காவில் 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அடுத்த வேளை உணவுக்கு வழியற்ற நிலையை அடைந்துள்ளனர்.

நிவாரண நிதியில் டிரம்பின் பெயர் ..!

இந்நிலையில், அமெரிக்காவை மீட்டெடுக்க கடந்த மாதம் இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் நிவாரண தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நிதியுதவிக்கான காசோலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் வல்லுனர்கள் கருத்து..!

இரு நாட்களுக்கு முன் எல்லா அதிகாரமும் தனக்கு மட்டுமே இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். தற்போது நிவாரண நிதி வழங்கும் காசோலையில் தன் பெயரை பொறிக்க உத்தரவிட்டுள்ளார். இது அவரது சர்வாதிகார மனநிலை உச்சத்தை அடைந்து வருவதைக் உணர்த்துகிறது என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here