கொரோனாவுக்கு இந்தியாவில் புதிய தடுப்பூசி?? விண்ணப்பித்த சைடஸ் கேடிலா நிறுவனம்!!!

0

அவசர பயன்பாட்டுக்காக 12 வயது மேற்பட்டவர்களுக்கு செலுத்த ZyCoV-D என்ற கொரோனா தடுப்பூசியை  அனுமதி அளிக்குமாறு சைடஸ் கேடிலா நிறுவனம் (Zydus Cadila) மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அதன் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.

தற்போது வரை இந்தியாவில் 4 வகை கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அவை கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வீ , மாடர்னா தடுப்பூசிகளாகும். மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ZyCoV-D தடுப்பூசிக்கு அனுமதி அளித்தால் அது இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஐந்தாவது தடுப்பூசியாகும்.

 

மற்ற கொரோனா தடுப்பூசி போல் அல்லாமல் இது வித்தியாசமான முறையில் மனிதனின் உடம்புக்குள் செலுத்தப்படுகிறது. அதாவது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் Hypodermic Needle மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்.

இந்த ZyCoV-D கொரோனா தடுப்பூசியானது புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டவை என்று சைடஸ் கேடிலா நிறுவனம் கூறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here