வத்திக்குச்சி வனிதாவை பாராட்டிய நடிகை அம்பிகா.. எதுக்குன்னு நீங்களே பாருங்க..

0

வனிதா விஜயக்குமார் சில நாட்களுக்கு முன்பு அம்மன் கெட்டப் போட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் பாதி பேர் அவருக்கு சப்போர்ட் செய்தும் மீதி பேர் நீங்கள் பார்ப்பதற்கு கோவையில் வைக்கப்பட்ட கொரோனா தேவி சிலை போல உள்ளீர்கள் என கலாய்த்தனர். இந்நிலையில் வனிதாவின் அம்மன் கெட்டப்பை நடிகை அம்பிகா புகழ்ந்து தள்ளியுள்ளார்.

வனிதா விஜயக்குமார், இவரை தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்கமுடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்பும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இணையத்தில் இவரை பற்றிய கருத்துக்கள் உலா வந்தன. பின்பு இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் முதல் பரிசும் பெற்றார்.

தற்போது வனிதா பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார். அதற்காக இவர் கல்கத்தா காளி அம்மன் கெட்டப் போட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்தார். அந்த புகைப்படத்திற்கு அம்பிகா வனிதாவை பாராட்டும் விதமாக கமெண்ட் செய்துள்ளார். நடிகை அம்பிகா, “வாவ்..சூப்பர் கெட்டப், உடம்ப நல்லா குறைச்சுட்ட. இந்த போட்டோவை பார்த்ததும் எனக்கு அம்மன் ரம்யா கிருஷ்ணன் நியாபகம் வந்தது. அம்மன் இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நீ நடிக்கலாம்”. இவ்வாறு அவர் கமெண்ட் செய்துள்ளார். இதனால் குஷியான வனிதா அவரது கமெண்டை போட்டோ எடுத்து நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here