பூ போட்ட சேலை…காதில் அழகாக தொங்கும் லோலாக்கு..! ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய சனம் ஷெட்டி!!!

0

மாடலிங் துறையை கையில் எடுத்து கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் சனம் ஷெட்டி. இந்நிலையில் சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கும் சனம் ஷெட்டி, தன்னிடம் ரசிகர்கள் சிலர் ரீல்ஸ் கேட்டதற்கு ‘இன்ன மயிலு’ பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இந்த பாடலின் இறுதியில் ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் அளித்து பரவசப்படுத்தி உள்ளார்.

சனம்  ஷெட்டி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.  இருப்பினும் அந்த அளவிற்கு அவர் பேமஸ் ஆகவில்லை. இதையடுத்து இவருக்கு பிக் பாஸ் சீசன்-4 ல்  பங்கு பெற  வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அதில் கலந்து கொண்டார். மேலும் அங்கு பல சர்ச்சைகள் வீண் விவாதங்கள் என பல பிரச்சனைகளை இவர் எதிர்கொண்டார். அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு இன்ஸ்டா வாயிலாக தனது ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

இந்நிலையில் அவரின் ரசிகர்கள் சிலர் ரீல்ஸ் வேண்டும் என கேட்டு உள்ளனர். அதற்காக அவர் புதிதாக ரீல்ஸ் ஒன்றை செய்து அதை  இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இந்த ரீல்ஸ்சில் அவர் பூ போட்ட சேலை, காதில் லோலாக்கு, நெற்றியில் பெரிய பொட்டு என வேற லெவல் லுக்கில் ‘இன்ன மயிலு’ என்ற வெளிவராத கவின் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார். இந்த வீடியோவின் இறுதியில் குலுங்கி குலுங்கி வெட்கத்தோடு சிரித்து முத்தத்தை ரசிகர்களை நோக்கி பறக்க விட்டு உள்ளார்.

மேலும் இந்த வீடியோவுடன், ரீல்ஸ் கேட்டவர்களுக்கு என ஒரு கேப்ஷன் வைத்து உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல் தலைவி என புகழ்ந்து கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும்  அந்த வீடியோவை வைரல் ஆக்குவதோடு லைக்களையும் வாரி வழங்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here