லியோ படத்தில் புதிதாக களமிறங்கிய பிரபல யூடியூபர் இர்பான்.., இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0
லியோ படத்தில் புதிதாக களமிறங்கிய பிரபல யூடியூபர் இர்பான்.., இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!
லியோ படத்தில் புதிதாக களமிறங்கிய பிரபல யூடியூபர் இர்பான்.., இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படைப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் புதிதாக ஒரு நபர் இணைந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படம்:

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் திரைப்படம் லியோ. அதுபோக இப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர் மற்றும் பிரியா ஆனந்த் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மேலும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது காஷ்மீர் பக்கத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுவரை சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி ஆகியோரின் பகுதிகள் படமாக்கப்பட்டு முடிந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். கூடிய விரைவில் படப்பிடிப்பை முடித்து சென்னைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ படத்தை குறித்து இணையத்தில் ஒரு புகைப்படம் உலா வருகிறது.

IND vs AUS 3rd ODI: போட்டி நடுவே வந்த அழையா விருந்தாளி…, பரப்பை ஏற்படுத்திய ஆட்டம்!!

அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் யூடியூபரான இர்பான் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவரும் லியோ படத்துல இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு பக்கம் தளபதி வச்சிருக்கும் பேக்கரியை ரிவியூ பண்ண போயிருப்பான் என்று கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here