தமிழ்நாடு பட்ஜெட் 2023-24: அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் சூப்பர் ஏற்பாடு!!!

0
தமிழ்நாடு பட்ஜெட் 2023-24: அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் சூப்பர் ஏற்பாடு!!!
தமிழ்நாடு பட்ஜெட் 2023-24: அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் சூப்பர் ஏற்பாடு!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று முன்தினம் (மார்ச் 20) நிதியமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். இதில் குடும்ப தலைவிக்கான உதவித்தொகை, இயற்கை விவசாய சலுகை என துறை வாரியாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்புகள் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் எளிதில் சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் பல்வேறு பகுதிகளில் நலத்திட்டங்கள் குறித்த தகவல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பத்திரிகை, செய்தி ஊடகங்களுக்கு கட்டுரைகளை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களிலும், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் வாட்சப் குழுக்களிலும் நலத் திட்டங்கள் குறித்த எளிய அட்டை விளம்பரங்கள் பகிரப்பட்டுள்ளது.

லியோ படத்தில் புதிதாக களமிறங்கிய பிரபல யூடியூபர் இர்பான்.., இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

அதேபோல் வேளாண், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள பொறுப்பு அலுவலர்கள் மற்றும் அமைச்சர்கள் இடம்பெறும் வாட்சப் குழுக்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதைத்தவிர தமிழ்நாடு மின்வாரிய துறையின் உதவியோடு 5.2 கோடி பேருக்கு பொது பட்ஜெட் குறித்த திட்டங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மக்கள் குறைதீர் முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நலத் திட்டங்கள் அனைத்து தரப்பட்ட மக்களையும் சென்றடைந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here