பிக் பாஸ் 5 இல் யூடியூப் பிரபலம் இனியன் – அப்போ ஒரே ஜாலி தான்!!

0

யூடியூப் மூலமாக மக்கள் மத்தியில் பரிச்சயமான பிரபலம் இனியன் தற்போது நடக்கவிருக்கும் பிக் பாஸ் 5 சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இதனை அடுத்து இந்த தகவல் காட்டு தீயாய் சோசியல் மீடியாவில் பரவி வருகின்றது.

யூடியூப் பிரபலம்

இன்றைய காலகட்டத்தில் யார் கையிலும் மொபைல் போன் இல்லாமல் இல்லை. திரைப்படங்கள் இன்று வந்தாலும் மக்கள் அத்தனையும் தாண்டி யூடியூப்பில் பார்க்கப்படும் ஹீரோக்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்பர். அதே போலவே தான் யூடியூப் குறும்படங்கள், காரணம் திரைப்படம் போல் நீளமாக அல்லாமல் சுருக்கமாக அனைத்து குறும்படங்களும் இருப்பது தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த குறும்படங்களில் பல ரகங்கள் உள்ளது. அப்படி அனைத்து ரகங்களிலும் கலக்கியவர் தான், யூடியூப் பிரபலம் இனியன். இவர் யூடியூப் சேனலான ஆசாம் மச்சி(awesome machi) என்ற சேனலில் பல குறும்படங்களில் நடித்துள்ளார். அதில் அவரது நகைச்சுவையான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்று கூட கூறலாம். கூடுதல் தகவல் என்னவென்றால் இவர் ஒரு பாடகர் என்பது தான்.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் ‘முரட்டு சிங்கிள்’ நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் குழு கூடிய விரைவில் பிக் பாஸ் 5 நடத்த இருக்கிறார்களாம். இந்த நிகழ்ச்சிக்கு இனி நடிகர் சிம்பு தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி – அதிர்ச்சியில் திரையுலகம்!!

தற்போது வரை இந்த சீசனில் நடிகர் நகுல், ஷிவாங்கி, அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து யூடியூப் பிரபலம் இனியனும் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து இனியன் தனது இன்ஸ்டாவில் “டேய் டேய் அநியாயம் பண்றிங்க டா” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here