தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் மாஸ் அப்டேட் – வைரலாகும் ட்வீட்!!

0

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குனர் ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

‘கர்ணன்’ டீசர்

1999ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மலைப்பகுதிகளில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ‘கர்ணன்’ திரைப்படம். கர்ணன் என்ற பெயரை உடைய ஒருவர், அந்த கிராமத்தை சேர்ந்த மக்களின் நலனுக்காக வில்லன்களை எதிர்த்து போராடுவது தான் கர்ணன் திரைப்படத்தின் கதைக்களம். இப்படிப்பட்ட கதைகளை இயக்குவதில் வல்லவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் எவ்வாறு மக்கள் மத்தியில் பேசப்பட்டதோ அதை விட அதிகமாக இந்த படம் பேசப்படும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. இப்படத்தில் நடிகர் தனுசுடன், மலையாள நடிகை ராஜீஷா விஜயன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் முன்னதாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மாவில் கலந்துக்கொள்ளும் பிக் பாஸ் பிரபலங்கள் – ட்ரெண்டாகும் ப்ரோமோ!!

தொடர்ந்து இந்த படத்தின் வெளியீடு அடுத்த மாதம் 9ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு வெளியாகும் தனுஷின் முதல் படம் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here