நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி – அதிர்ச்சியில் திரையுலகம்!!

0

நடிகர் கார்த்திக் உடல்நல குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்திக்

தமிழ் சினிமாவின் 80, 90களில் ரசிகர்களின் நவரச நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். இயக்குனர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் கார்த்திக். இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு நல்ல பெயரையும், விருதுகளையும் பெற்றுத்தந்தது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் நடித்திருந்த ‘மௌன ராகம்’ திரைப்படம் இவருக்கு முன்னணி கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்றுத்தந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது 60வது வயதான நடிகர் கார்த்திக் சினிமாவில் நடித்து வருகிறார். முன்னதாக அரசியலில் ஈடுபட்டு வரும் கார்த்திக், தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதன்படி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக்கு சனிக்கிழமை அன்று லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

தனது திருமண விஷயத்தை பற்றி மனம் திறந்த விஷ்ணு விஷால் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக் சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கார்த்திக்கிற்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. என்றாலும் மூச்சுத்திணறலுக்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here