சீக்கிரமே இத பண்ணுங்க இல்லேனா அபராதம் தான் – ஆதார், பான் இணைப்பு கடைசி நாள்! வழிமுறைகள் இதோ!!

0

இந்தியாவில் பல தினங்களாக ஆதார் மற்றும் பான் கார்ட் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வந்தது. தற்போது அதற்கான கடைசி தேதியை இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பு:

இந்தியாவின் மக்கள் தொகை மிகவும் அதிகம். இந்நிலையில் பண பதுக்கல் போன்ற சட்டவிரோதமான செயல்களை தடுக்கும் வகையிலும், மக்கள் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையிலும் இந்தியா முழுவதும் ஆதார் கார்டு பெறுவதை கட்டாயமாக்கப்பட்டது. மேலும் சிம் கார்டு வாங்குவது முதல் பேங்க் அக்கவுண்ட் தொடங்குவது வரை ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தனி நபரின் வருமானம், வங்கி பரிவர்த்தனை போன்றவற்றை கண்காணிப்பதற்கு பான் கார்டு கொண்டுவரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 46,951 பேர் பாதிப்பு!!

மேலும் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என்றும் இந்திய அரசு சில மாதங்களாகவே மக்களிடம் வற்புறுத்தி வருகிறது. இதனை சில பேர் செய்தாலும் பெரும்பாலான மக்கள் இதனை செய்ய தவறிவிட்டனர். தற்போது இதுகுறித்து அதிரடியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் பான் கார்டும் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எளிமையான முறையில் பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பு:

  • பயனாளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட போனில் இருந்து 567678 என எண்ணிற்கு அல்லது 56161 என எண்ணிற்கு தங்களது பான் நம்பர் மற்றும் ஆதார் நம்பரை எஸ்எம்எஸ் செய்யவேண்டும்.
  • இணையம் மூலம் http://incometaxindiafiling.gov.in/ என்ற தளத்திற்கு சென்று அதில் உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்யவேண்டும். பின்பு முக்கியமாக உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பிழை இல்லாமல் பதிவு செய்யவேண்டும். இதனை தொடர்ந்து captcha மற்றும் உங்கள் போன் நம்பருக்கு ஓர் ஒடிபி வரும் அதனை பதிவு செய்யவேண்டும்.
  • இணையம் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் பதிவு செய்ய இயலாதவர்கள் இ சேவை மையத்திற்கு சென்று Annexure-i என்ற பார்மை வாங்கி அதில் கேட்டுள்ள விவரங்களை பதிவு செய்து மையத்தில் கொடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here