தனது திருமண விஷயத்தை பற்றி மனம் திறந்த விஷ்ணு விஷால் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0

தமிழ் திரையுலகின் இரண்டாம் கட்ட நடிகரான விஷ்ணு விஷால் தற்போது பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி காட்டு தீயாய் பரவி வருகின்றது.

நடிகர் விஷ்ணு விஷால்

திரையுலகில் சில வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தவறும், இரண்டாம் நடிகராக இருபவருமான நடிகர் விஷ்ணு விஷால் ஆரம்பத்தில் கிரிக்கெட் துறையில் தான் இருந்துள்ளார். பின்பு, முதன் முதலாக கடந்த 2009 ஆம் ஆண்டு இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் வெற்றி அடைந்ததை அடுத்து தொடர்ந்து இவர் நடித்து வந்தார். முன்னணி நடிகராக இல்லாவிட்டாலும் இவர் அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகராக இருந்து வந்தார்.

டேஸ்டியான ‘தாவா பன்னீர்’ ரெசிபி – வீட்டில செஞ்சு அசத்துங்க!!

இவருக்கு நல்ல பெயரினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்த படங்கள் என்றால் அது, “நீர்ப்பறவை” மற்றும் “ராட்சசன்” இந்த இரு படங்களிலும் இவரது நடிப்பு மக்களை வெகுவாகவே கவர்ந்தார். இதனை அடுத்து நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிச்சயத்தர்தம் நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்களது திருமண தேதி குறித்து இருவர் தரப்பில் இருந்தும் எதுவும் கூறப்படவில்லை. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல நடிகர் விஷ்ணு விஷால் கூடிய விரைவில் தங்களது திருமணம் குறித்து கூறுவேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதே போல் தெலுங்கு மருமகனாக மாறபோவதில் மகிழ்ச்சி அடைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது விஷ்ணு விஷால் ‘ஆரண்யா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் விழாவில் கலந்துகொண்ட இவர் விரைவில் தனக்கும் ஜுவாலாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த திரைப்படம் பிரபு சாலமனின் ‘காதன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here