பாரதி கண்ணம்மாவில் கலந்துக்கொள்ளும் பிக் பாஸ் பிரபலங்கள் – ட்ரெண்டாகும் ப்ரோமோ!!

0

‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘ராஜா ராணி 2’ சீரியலின் ஸ்பெஷல் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வார சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் சீசன் 4ன் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

பாரதி கண்ணம்மா சிறப்பு தொடர்

விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘ராஜா ராணி 2’ தொடர்களின் சிறப்பு எபிசோடுகள், மெகா சங்கமமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2வின் சீரியல் குடும்பங்கள் ஒரு போட்டிக்கு சென்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தொடரில் கடந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்பட்ட குடும்ப உறவுகளுக்கு இடையேயான ஒற்றுமையை அறிந்து கொள்ளும் போட்டியில் பாரதி கண்ணம்மா குடும்பம் முதலிடத்தை பிடித்தது. அந்த போட்டியின் ஸ்பெஷல் தொகுப்பாளராக பிக்பாஸ் அர்ச்சனா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து அடுத்தடுத்து வரும் எபிசோடுகளை இன்னும் ஸ்பெஷலாக்கும் விதத்தில் வரும் வாரங்களில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. அந்த வகையில் வரும் வார எபிசோடுகளில் சிறந்த என்டர்டைன்மெண்ட் மிக்க குடும்பம் எது என்று போட்டி நடக்கவுள்ளது.

அதில் கலந்து கொள்ளும் ‘ராஜா ராணி 2’ குடும்பத்தில் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் பழைய பாடல் ஒன்றுக்கு நடனமாடுகிறார்கள். அதே சமயம் பாரதி கண்ணம்மா குடும்பம் சாமி பாடல் ஒன்றுக்கு நடனமாட உள்ளது.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் பிரபலங்கள் சோம், ரியோ மற்றும் சம்யுக்தா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக இந்த சிறப்பு தொடரின் ப்ரோமோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. பிக்பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள எபிசோடுகள் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here