ஐபிஎல்லில் தனது அணி கேப்டனின் சாதனை முறியடித்த இளம் வீரர்…, வெளியான முழு விவரம் உள்ளே!!

0
ஐபிஎல்லில் தனது அணி கேப்டனின் சாதனை முறியடித்த இளம் வீரர்..., வெளியான முழு விவரம் உள்ளே!!
ஐபிஎல்லில் தனது அணி கேப்டனின் சாதனை முறியடித்த இளம் வீரர்..., வெளியான முழு விவரம் உள்ளே!!

நடந்து வரும் ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சுப்மன் கில் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் சாதனை முறியடித்துள்ளார்.

ஐபிஎல்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், ஹைதராபாத் அணி கடைசி பந்தில் சிக்ஸர் விளாசியதன் மூலம், 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றியை பதிவு செய்தது. இதில், சஞ்சு சாம்சன் தலைமையிலான அணி தோல்வியை தழுவினாலும், அணி வீரர்கள் சாதனை படைக்க தவறவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, இந்த போட்டி மூலம் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் அரங்கில் அதிக (183) விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து, ராஜஸ்தான் அணியின் இளம் வீரரான, யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், சஞ்சு சாம்சன், சுப்மன் கில் மற்றும் பிரித்வி ஷா உள்ளிட்ட பல வீரர்களது சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 3 அரைசதம் மற்றும் ஒரு சதம் உட்பட 477 ரன்கள் குவித்துள்ளார்.

WTC 2023: மே 23க்குள் இதே செய்தால் தான் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம்…, பிசிசிஐ அதிரடி முடிவு!!

இதன் மூலம், ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில், 1000 ரன்களை குறைந்த வயதில் கடந்து, பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் சாதனை முறியடித்து உள்ளார். அதாவது, 21 வயது 130 நாட்களில், 34 இன்னிங்ஸில் 1024 ரன்கள் எட்டி சாதனை படைத்து தற்போது 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில், ரிஷப் பண்ட் 20 வயது 218 நாட்களில் இந்த சாதனையை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில், பிரித்வி ஷா (21 வயது 169 நாட்கள்), சஞ்சு சாம்சன் (21 வயது 183 நாட்கள்), சுப்மன் கில் (21 வயது 222 நாட்கள்) இந்த சாதனையை படைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here