
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்திய வீரர்கள் பலர் காயத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், பிசிசிஐ இவர்களுக்கு நேரம் குறித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிசிசிஐ:
இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில், வரும் ஜூன் 7ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு சரியாக ஒரு மாதமே உள்ளதால், இரு அணிகளை இதற்கு தயார்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த வகையில், பிசிசிஐ ஆனது உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் உடல் நிலையையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் தான், ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்களை காயம் ஏற்படாதவாறு கவனமுடன் விளையாட பிசிசிஐ அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும், எதிர்பாராத விதமாக, கே எல் ராகுல் ஐபிஎல்லில் காயம் ஏற்படவே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் அரங்கில் பிராவோவை முந்திய சாஹல்…, எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து முதலிடம்!!
இவரை தொடர்ந்து, ஜெய்தேவ் உனத்கட் தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால், இவரது வருகையும் பெறும் கேள்வி குறியாகி உள்ளது. வரும் மே 23ம் தேதிக்குள் இவரது உடற்தகுதியை பொருந்தே மாற்று வீரரை பிசிசிஐ அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியில் உள்ள, உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய பவுலர்களும் காயத்தால் அவதிக்குள்ளாகி உள்ளனர். இவர்களுக்கும் மே 23ம் தேதி வரை பிசிசிஐ உடற்தகுதியை நிரூபிக்க நேரம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.