ரயில் பயணிகள் கவனத்திற்கு., இனி வேறு நபர் டிக்கெட்டில் நீங்கள் பயணம் செய்யலாம்.,. எப்படி தெரியுமா??

0
ரயிலில் பயணம் செய்வோருக்கு தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது முன் பதிவு செய்யப்பட்ட நபரின் டிக்கெட்டை வைத்து இன்னொரு நபர் பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர். அது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். இதற்கு முதலில் டிக்கெட்டை முன்பதிவு செய்த நபரின் அடையாள அட்டையும். பிறகு யார் இந்த டிக்கெட்டை வைத்து பயணம் செய்கிறார்களோ அந்த நபரின் அடையாள அட்டையும் கட்டாயம் தேவை.
இது இரண்டும் இருந்தால் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் நகலை வைத்து ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டருக்கு செல்ல வேண்டும். அங்கு தேவையான ஆதாரங்களை காண்பித்து அந்த நபருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதன் பின் தேவையான அடையாளங்கள் அனைத்தும் சரிபார்த்த பின்பு உங்களது பெயருக்கு டிக்கெட் மாற்றி தரப்படும். ஆனால் இந்த டிக்கெட்டில் பயணிக்க வேண்டும் என்றால் அந்த ரயில் கிளம்புவதற்கு ஒரு நாளைக்கு முன்பே டிக்கெட் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here