கேஜிஎஃப் 2 ரிலீஸ் நாளில் தேசிய விடுமுறை – பிரதமருக்கு யாஷ் ரசிகர்கள் கடிதம்!!

0

கேஜிஎஃப் 2 என்னும் பிரம்மாண்ட திரைப்படம் வரும் ஜூலை 16ம் தேதி அன்று உலக திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இதனை முன்னிட்டு வரும் ஜூலை 16ம் தேதி அன்று தேசிய விடுமுறை அளிக்கவேண்டும் என்று யாஷ் ரசிகர்கள் பிரதமருக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளனர். தற்போது அது வைரலாகி வருகிறது.

கேஜிஎஃப் 2:

கன்னட மொழியில் கடந்த 2018ம் ஆண்டில் கேஜிஎஃப் என்னும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளனர். இதனை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படம் அங்கு செம ஹிட் ஆகியுள்ளது. மேலும் வசூலிலும் பல சாதனைகளை படைத்தது. அதனால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் மாற்றி வெளியிட்டனர். அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடமும் வசூலிலும் பல சாதனைகளை படைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் இயக்கப்பட்டு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இரண்டாவது பாகத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சஞ்சய் தத், ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 8ம் தேதி அன்று யாஷ் பிறந்தநாள் என்பதால் அதற்கு முதல் நாள் இரவு இந்த படத்தின் டீஸர் வெளியானது. ஒரே நாளில் மில்லியன் லைக்ஸ் மற்றும் பல கோடி வியூஸ் போன முதல் இந்திய திரைபடம் என்ற பெருமையை பெற்றது. மேலும் இந்த டீஸர் தற்போது வரை பல சாதனைகளை படைத்தது வருகிறது.

படவாய்ப்பு இல்லாததால் வயதான இயக்குனருடன் ஜோடி சேரும் அமலா பால் – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

தற்போது இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை 16ம் தேதி வெளியாகும் என்று அதிர்க்கரபூர்வமாக அறிவித்தனர். இதனை முன்னிட்டு யாஷ் ரசிகர்கள் பிரதமருக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளனர். கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியீடு முன்னிட்டு தேசிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஓர் கடிதம் எழுதியுள்ளனர். மேலும் எங்கள் உணர்வுகளை புரிஞ்சிக்க முயற்சியுங்கள், இது படம் அல்ல எங்கள் உணர்வு என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர். தற்போது இது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here