படவாய்ப்பு இல்லாததால் வயதான இயக்குனருடன் ஜோடி சேரும் அமலா பால் – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பாலுக்கு சில வருடங்களாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது வயதான இயக்குனருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அமலா பாலை கிண்டலடித்து வருகின்றனர்.

அமலா பால்

கேரளா பெண்ணான அமலா பால் சிந்து சமவெளி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். முதல் படமே அவருக்கு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் விட முயற்சியால் மைனா படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கைப்பற்றினார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் என பல திரையுலகை கலக்கி வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி அமலா பாலின் வாழ்க்கையில் நல்ல விஷயங்களாகவே குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார். பல நடிகைகள் பொறாமை படும் அளவிற்கு இவரின் வளர்ச்சி இருந்தது. அடுத்து தனது வாழ்க்கையில் திருமணம் என்னும் பந்தத்தில் நுழைந்தார். ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அந்த திருமணமும் முறிவில் முடிந்தது. அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகளும் பறிபோயின. இதனால் தனது கவனத்தை போட்டோஷூட் போடுவதில் செலுத்த ஆரம்பித்தார். இந்நிலையில் அமலா பால் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் ‘பாரத் நெட்’ திட்டம் – சட்ட சபையில் கவர்னர் உரை!!

இத்தனை நாட்கள் படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த அமலா பால் தற்போது ஒரு அந்தோலஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம் தயாரிக்கும் குட்டி ஸ்டோரி படத்தில் நடித்து வருகிறார். இதில் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். படவாய்ப்புகள் இல்லாமல் இப்படி வயதான நடிகருடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு ஆகிவிட்டதே கிண்டலடித்து வருகின்றனர். இந்த குட்டி ஸ்டோரி திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here