மலிவு விலையில் போக்கோ M3 ஸ்மார்ட்போன் – இந்தியாவில் அறிமுகம்!!

0

தற்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்களுள் ஒன்றான போக்கோ நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான போக்கோ M3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது அந்த போனின் அம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

போக்கோ: 

தற்போது ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் பயனாளர்கள் விருப்பத்திற்கேற்ப பல அம்சங்களை அந்த ஸ்மார்ட்போனில் அமைத்து வருகிறது ஸ்மார்ட்போன் நிறுவனம். இதனால் பயனாளர்கள் எந்த ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்று குழம்பி வருகின்றனர். தற்போது இதன் வரிசையில் போக்கோ நிறுவனம் தனது லேட்டஸ்ட் மாடலான போக்கோ M3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் 9ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் சர்வதேச சந்தைக்கு கடந்த நவம்பர் மாதமே விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் 43 மெகா பிக்சலுடன் கூடிய ட்ரிபிள் கேமெராவை கொண்டுள்ளது. மேலும் ஃபுள் HD+ டிஸ்பிளே, 6000 mAh திறன் கொண்ட பேட்டரி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

கிளோஸப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து அமலா பால் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியையும் மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியையும் பெற்றுள்ளது. போக்கோ நிறுவனத்தின் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியா சந்தையில் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,999க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் என்னும் ஆன்லைன் விற்பனை தளத்தில் கிடைக்கும் என்றும் போக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here