தமிழகத்தில் உள்ள கிராமங்களில் ‘பாரத் நெட்’ திட்டம் – சட்ட சபையில் கவர்னர் உரை!!

0

தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் கிராமங்களில் வரும் மார்ச் 31 ம் தேதிக்குள்ளும் மற்ற கிராமங்களில் நவம்பர் மாதம் 30 ம் தேதிக்குள்ளும் ‘பாரத் நெட்’ திட்டம் செயல்படுத்த உள்ளதாக தமிழக ஆளுநர் அறிவித்துள்ளார்.

‘பாரத் நெட்’ திட்டம்

தமிழகத்தில் சட்ட சபை கூட்டம் இன்றைக்கு காலை தொடங்கி நடந்து வருகிறது. சட்டசபையில் மாநிலத்தின் கவர்னர் ஆரம்ப உரையாற்றினார். அந்த உரையில், மாநிலம் முழுவதும் ‘ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம்’ மூலம் பெரிய அளவிலான தகவல் தொழிநுட்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கான சேவையை வழங்குவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. கடந்த 2020 ம் ஆண்டிற்கான ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’ என குடியரசு தலைவர் கையில் தங்க விருதினை பெற்றுள்ளது.

கிளோஸப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து அமலா பால் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

‘தமிழ்நாடு நம்பிக்கை இணையகொள்கை’ மூலம் பல்வேறு அரசு சேவைகள் தடையேதும் இல்லாமல் பாதுகாப்பாக நடைபெறுகிறது. இந்த கொள்கையின் மூலம் தரவுகளின் பாதுகாப்பையும் தனி உரிமையையும் உறுதி செய்வதில் அரசு கருத்துடையதாயிருக்கிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழிநுட்ப நிறுவங்களின் முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே ‘தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கை’ யின் நோக்கமாகும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தேவையான இன்டர்நெட் வசதியை உருவாக்குவதற்காக ஒரு பங்கு வருவாய் உள்ள கிராமங்களில் வரும் மார்ச் 31 ம் தேதிக்குள்ளும் மற்ற கிராமங்களில் நவம்பர் 30 ம் தேதிக்குள்ளும் ‘பாரத் நெட்’ திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இதற்காக மாநிலத்தில் தமிழ்நெட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்துடன் பாரத் நெட் சேவையை இணைப்பதன் மூலம் மின்னணு சேவையான ‘ஒருங்கிணைந்த மின்னணு கட்டமைப்பு’ ஏற்படுத்தப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அனைத்து மக்களுக்கும் நம்பகமான மின்சாரத்தை வழங்குவது தமிழ்நாட்டு உள்கட்டமைப்பின் அடிப்படை கூறாகும். கடந்த 10 ஆண்டுகளில் 32,149 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதற்காக பல்வேறு பல்வழிச்சாலைகள் மேம்பாலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பிற்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருவதால் சாலை விபத்துகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகின்றன என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here