அதிரடியான வீழ்ச்சியில் தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

0

சென்னையில் இன்றைய மாலை நிலவரப்படி ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நகை வாங்க காத்திருக்கும் மக்கள் மற்றும் நகை விரும்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம்:

கடந்த பண்டிகை காலத்தில் இருந்தே தங்கத்தின் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்களில் விலை சற்று அதிகரித்தாலும் மறு நாள் அதிரடியாக தங்கத்தின் விலை குறைந்து விடுகிறது. இதனால் நகை வாங்குவதற்கு அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தங்கத்தின் இந்த விலை ஏற்றம் மற்றும் இரக்கம் காரணமாக தொழில் முனைவோர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?? என்று குழம்பி வருகின்றனர். தற்போது இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை – காரணம் என்ன??

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.480 குறைந்துள்ளது. இதனால் தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ.36,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூ.60 குறைந்துள்ளது. இதன்படி தற்போது 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,565க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் தற்போது வெள்ளி 1 கிராம் ரூ.75.30 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.75,300 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here