பொதுமுடக்க காலத்தில் 30 லட்சம் பயணிகள் மட்டும் வருகை – இந்திய சுற்றுலாத்துறை அறிவிப்பு!!

0

2020 கொரோனா பொதுமுடக்க காலத்தில் இந்தியா வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 30 லட்சம் ஆகும். கடந்த 2019 ம் ஆண்டை விட இது 75% குறைவான எண்ணிக்கையில் காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை

ஆண்டு தோறும் வெவ்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் இந்தியா வருவது வழக்கம். இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களின் மூலம் இந்திய அரசுக்கு கணிசமான தொகை கிடைத்து வந்தது. இதனால் சுற்றுலாதுறையின் மீது நம் நாட்டு அரசாங்கத்தின் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். கடந்த 2020 ம் ஆண்டு உலகம் முழுவதும் உருவான கொரோனா பெருந்தொற்றால் இந்திய சுற்றுலாத்துறை பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

ஜனவரி மாத சிறந்த வீரர் – பட்டியலில் இடம்பெற்ற ரிஷாப் பாண்ட்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலத் படேல் கூறும்போது, முதல் முறையாக இந்தியாவில் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 1 கோடியை எட்டியது 2017 ம் ஆண்டு. அந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வந்த பயணிகள் 1 கோடியே 4 லட்சமாக இருந்தது. தொடர்ந்து 2019ம் ஆண்டு இந்தியாவுக்கு 1 கோடியே 93 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 2018 ம் ஆண்டு 1 கோடி 50 லட்சமாக பயணிகளின் வருகை இருந்தது. தற்போது கடந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கில் 26 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டும் தான் இந்தியா வந்ததாகவும் கடந்த ஆண்டை விட இது 75% குறைவு எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here