நீட் போலி மார்க்சீட் வழக்கு – தந்தை, மகளுக்கு நிபந்தனை ஜாமீன்!!

0

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி ஓர் போலியான மார்க்ஸீட்டை தயாரித்த தந்தை மற்றும் மகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தற்போது இவர்கள் இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

நீட் தேர்வு மோசடி வழக்கு

மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வாக கருதப்படும் தேர்வு தான் நீட் தேர்வு. இதனை மத்திய அரசு நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்து மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தீக்ஷ என்பவர் 610 மதிப்பெண் எடுத்திருப்பதாக கூறி ஓர் போலியான மார்க்ஸீட்டை கலந்தாய்வில் சமர்ப்பித்தார். அவரது மார்க்ஸீட்டை சரிபார்த்த அலுவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை செய்து பார்த்ததில் அது போலி மார்க்சீட் என்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த மாணவியின் உண்மையான மதிப்பெண் 27 என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த மாணவி மற்றும் அவரது தந்தை பல் மருத்துவரான பாலசந்திரன் ஆகிய இருவரும் மேல் போலி சான்றிதழ் தயாரித்தல் உட்பட 6 வழக்குகள் அவர்கள் மேல் போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறையில் உள்ள தந்தை மற்றும் மகள் தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என்று கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தது.

நிபந்தனை ஜாமீன்:

ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தது. இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலச்சந்திரன் 33 நாட்கள் சிறையில் உள்ளார். மேலும் இவரது செயலால் யாரும் பாதிக்கவில்லை என்றும் இவர்கள் தரப்பு வக்கீல் தெரிவித்தார். மேலும் போலீசார் தரப்பில் ஆவணங்கள் அனைத்தும் கையகப்படுத்தியுள்ளனர்.

பொதுமுடக்க காலத்தில் 30 லட்சம் பயணிகள் மட்டும் வருகை – இந்திய சுற்றுலாத்துறை அறிவிப்பு!!

மேலும் இந்த வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது அறிக்கைக்கு காத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர் போலீஸ் தரப்பினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தந்தை மற்றும் மகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளார். மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பாலச்சந்திரன் பெரியமேடு காவல் நிலையத்திற்கு தினமும் சென்று கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here