20 கோடி ஸ்மார்ட்போன்களை விற்று சியோமி நிறுவனம் புதிய சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

0

சியோமி நிறுவனம் பல மாடல்களில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறது. தற்போது தனது ஸ்மார்போன் விற்பனையில் புதிய சாதனை ஒன்றை சியோமி நிறுவனம் படைத்துள்ளது.

சியோமி:

ஸ்மார்போன் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான சியோமி பயனாளர்களின் தேவைக்கேற்ப பல மாடல்கள் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவிற்கு பயனாளர்களின் தேவைக்கேற்ப மாடல்களை வெளியிட்டு வருகிறது சியாமி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் எம்.ஐ 10டி ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ப்ரோ உள்ளிட்ட மாடல்களை சேர்த்து 90 லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 2020ம் ஆண்டில் உலக அளவில் 14.5 கோடி ஸ்மார்ட்போன்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம் இதன் ஏற்றுமதி ஆண்டுக்கு 31 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 2020ம் ஆண்டின் நான்காம் கால ஆண்டில் 4.3 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது.

இசையமைப்பாளர் யுவனின் வெப்சைட் நாளை தொடக்கம் – குஷியில் ரசிகர்கள்!!

மேலும் சீனாவில் இதன் ஏற்றுமதி 46 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு 13 சதவீத வளர்ச்சியுடன் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மேலும் ரெட்மி நோட் சீரிஸ் இதுவரை 20 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்துள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே அவர்களின் சாதனை மைல்கல் என்றும் தெரிவித்துள்ளது சியோமி நிறுவனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here