இசையமைப்பாளர் யுவனின் வெப்சைட் நாளை தொடக்கம் – குஷியில் ரசிகர்கள்!!

0

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனக்கு சொந்தமாக புதிதாக ஒரு வெப்சைட் தொடங்கப்போவதாக அறிவித்தார். தற்போது அந்த வெப்சைட் தொடங்கும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

யுவன்:

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் முக்கியமான இசையமைப்பாளராக திகள்பவர் தான் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தையிடம் இருந்து இசை அறிவை மற்றும் பெற்றுக்கொண்டு ரசிகர்களை தனது இசை வலையில் விழ வைக்கும் திறமையை சுயமாக கண்டுபிடித்து அனைவரையும் இசை மூலம் தன் வசம் கட்டிப்போட்டுள்ளார்  என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் தற்போதைய காலத்தில் இளைஞர்கள் அனைவரும் எந்த மனநிலையில் இருந்தாலும் அதற்கு யுவனின் பாடல்களை தான் கேட்டு வருகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் காதல், அம்மா, அப்பா, நட்பு ஆகிய பாசத்தில் தனது இசையில் மேஜிக் செய்து வருகிறார். இவருக்கு பெரிய நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் உள்ளார்கள். அந்த அளவிற்கு இவரது இசையால் மக்கள் மயங்கிப்போய் இருக்கிறார்கள். தற்போது சில தினங்களுக்கு முன்பு யுவன் தனக்கு சொந்தமாக ஒரு வெப்சைட் தளத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்தார். அதன் பெயர் U1 records என்றும் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பில் புதிதாக 7 அறிகுறிகள் கண்டுபிடிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

தற்போது இவர் தனது வெப்சைட் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி இவரது வெப்சைட் வரும் 10ம் தேதி அதாவது நாளை மாலை 2 மணி அளவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் www.u1records.com என்ற இணையப்பக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தலத்தில் அவரது இசைபற்றிய தகவல் பலவற்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here