கடனை திரும்ப செலுத்தாமல் ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியல் – டாப் 10 லிஸ்ட்டை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!!

0

வங்கிகளில் கடன் பெற்று அதை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கடன் தொகை 5.34 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியல்

வாங்கிய கடனை வேண்டுமென்றே செலுத்தாமல் ஏய்ப்பு செய்தவர்களின் பட்டியலில், முதல் 100 இடங்களில் இருக்கும் நிறுவனங்கள் செலுத்தாத கடன் தொகை மட்டும் தொகை 84ஆயிரத்து 632 கோடி என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை உள்ள புள்ளிவிவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பணம் செலுத்தாதவர்களின் கடன் தொகை மட்டுமே சென்ற ஆண்டை விட 5.34 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

#INDvsENG டெஸ்ட் – இங்கிலாந்து அணி அபார வெற்றி!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரிசர்வ் வாங்கி அறிவித்த பட்டியலில் பிரபல வைர வணிகர் நீரவ் மோடியின் உறவினரான மெகுல்சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் செய்த கடன் ஏய்ப்பு தொகை மட்டும் 5 ஆயிரத்து 693 கோடி ஆகும். 4403 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்தில் ஜூன்ஜுவாலா சகோதரர்களின் ஆர்இஐ அக்ரோ நிறுவனம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here