கொரோனா பாதிப்பில் புதிதாக 7 அறிகுறிகள் கண்டுபிடிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

0
corona spread
corona spread

உலக மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றின் அறிகுறிகளாக மேலும் சில பாதிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. காய்ச்சல், தொண்டை வலி முதலான அறிகுறிகளோடு புதியதாக 7 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

புதிய அறிகுறிகள்:

பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்தும், நோய் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தும் கூட இன்னமும் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்த அளவில் குறையவில்லை என்றே கூறலாம். இதுவரையில் கொரோனா பாதிப்பின் அறிகுறிகளாக காய்ச்சல், தொண்டைவலி, மூச்சுத்திணறல், இருமல், தலைவலி, சுவை மற்றும் நுகர்வு திறன் இழத்தல் ஆகியன கண்டறியப்பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

corona test
corona test

ராமர் கோவிலுக்கு முஸ்லிம்கள் நன்கொடை – அயோத்தியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இந்நிலையில் தற்போது முற்றிலும் புதிதாக ஏழு புதிய அறிகுறிகள் கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. தசைவலி, மூட்டு வலி, தோல் சம்பந்தமான பிரச்சினைகள், வெண்படலம் தோன்றுதல், கைகள் மற்றும் கால் விரல்களின் நிறம் மாறுதல், வயிற்றுப்போக்கு ஆகியன புதிய அறிகுறிகளாகும். இவை முற்றிலும் பழைய அறிகுறிகளுடன் சம்பந்தமில்லாதவையாகும். எனவே இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here