மதுரை மெட்ரோ ரயில் திட்டம் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!

0

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர பல தரப்பினர் கூறிவருகின்றனர். தற்போது இதுகுறித்து ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது ஐகோர்ட் கிளை மத்திய, மாநில அரசுகள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

மெட்ரோ:

டெல்லி மாநிலத்தில் சுமார் 15 ஆண்டு காலமாக மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. மேலும் கொல்கத்தா மாநிலத்திலும் பல ஆண்டுகளாக மெட்ரோ ரயில் இயங்கிவருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் சென்னையில் மட்டும் தான் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாய் கருதப்படும் மதுரை பகுதிகளில் மெட்ரோ ரயில் கொண்டுவர வேண்டும் என்று பல தரப்பினர் கருதி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

திருமங்கலம், மேலூர், பெருங்குடி, நாகமலை, புதுக்கோட்டை வரை மதுரை நகரமாக தான் கருதுகின்றனர். இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் பேருந்துகளை நம்பி தான் உள்ளார்கள். எனவே மெட்ரோ திட்டத்தை மதுரையில் கொண்டு வரவேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் கோவையில் விரைவில் மெட்ரோ திட்டம் தொடங்கவுள்ளது என்று அரசு அறிவித்துள்ளது.

ராமர் கோவிலுக்கு முஸ்லிம்கள் நன்கொடை – அயோத்தியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

தற்போது இதனை தொடர்ந்து மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வுக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மெட்ரோ குறித்து அறிவிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எதற்கு தாமதம் செய்து வருகின்றனர். இதுகுறித்து விரைவில் பதிலளிக்கவேண்டும் என்று ஐகோர்ட் கிளை மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை வரும் மார்ச் மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here