மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூஜை செய்யலாமா ?? ஆன்மீக விளக்கம்!!

0

பெண்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய். மாதவிடாய் காலங்களில் பூஜை செய்யலாமா?? விரதம் இருக்கலாமா?? என்று பல குழப்பங்கள் இருக்கின்றன. முந்தைய காலங்களில் மாதவிலக்கான நேரத்தில் பெண்கள் வீட்டைவிட்டு ஒதுங்கி தனியாக இருப்பார்கள். ஆனால், இன்றைய காலங்களில் அப்படியில்லை. ஒரு சில ஊர்களில் மட்டுமே இன்றைக்கும் பின்பற்றபடுகிறார்கள்.

மாதவிடாய் நாட்களில் பூஜை செய்யலாமா??

மாதவிடாய் நாட்களில் நம் உடல் மிகவும் வெப்பமாக இருக்கம். இதனால்தான் செடி, மரம் போன்றவற்றிற்கு அருகிலே செல்ல கூடாது என்று குறிப்பிடப்படுகிறது. அப்படி சென்றால் பூக்கின்ற மரம் பூக்காது, காய்கின்ற மரம் காய்க்காது என்றும் சொல்லப்படுகிறது. பட்டுப்புழு வளர்க்கும் இடங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், பட்டுப்புழு மிக மிக மென்மையானது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் பட்டுப்புழு வளர்க்கும் பகுதிகளுக்கு சென்று புற்கள் அல்லது தண்ணீர் தெளித்தாலோ அவர்கள் உடலில் இருக்கும் வெப்பமானது பட்டுப்புழுக்களை அழித்துவிடும் என்று கூறப்படுகிறது.

பெண்கள் இந்த நாட்களில் பூஜை செய்யலாமா என்றால் செய்ய கூடாது. ஏனென்றால், உடலில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். உடலில் ஏற்படும் வெப்பமானது கல்லை கூட கரைக்கும் சக்தியுடையது என்றும் அதனால்தான் கோவில் கருவறைக்கு செல்ல கூடாது என்று கூறுகிறார்கள். அந்த நாட்களில் மிகவும் உடல் சோர்வாக இருக்கும். குறைந்தது மூன்று நாட்களாவது ஓய்வு வேண்டும். இது அவர்கள் உடல் நலத்திற்கு நல்லது. தொடர்ச்சியாக விரதம் கடைபிடித்து வருபவர்கள் விரத நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால் பூஜை செய்யாமல் உடல்நிலை நலமாக இருந்தால் விரதம் மட்டும் மேற்கொள்ளலாம்.

மாதவிடாய் நாட்களில் திருநீறு, குங்குமம் வைக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. பூஜை அறையில் இருப்பதை வைக்க கூடாது. வீட்டில் இருப்பதை பயன்படுத்தலாம். பலருக்கு கோவில் அல்லது திருவிழாவிற்கு சென்ற பின் மாதவிலக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்று பயப்பட வேண்டாம். முக்கிய பூஜை மற்றும் கருவறைக்கு செல்லாமல் தனித்திருந்தாலே போதும். மாதவிலக்கு என்பது இயற்கையான ஒன்று. அதை எண்ணி பயப்பட தேவையில்லை. இந்தமாதிரியான நேரங்களில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். கடினமான வேலைகளை செய்யாமல் ஓய்வு எடுப்பது நல்லது. தினமும் விளக்கு போடும் பழக்கம் இருக்கும் பெண்கள் பூஜை அறையில் விளக்கு போடாமல் மூன்று நாட்களுக்கு பிறகு வீட்டில் முன்புறம் விளக்கு ஏற்றலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here