Wednesday, May 15, 2024

விமான டிக்கெட் முறைகேடு – எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அதிரடி கைது!!

Must Read

பண ஆசையால் எம்.ஜி .ஆர் . மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான மீர் முஸ்தாபா உசேன் விமான டிக்கெட்டில் மோசடி செய்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பணமோசடி:

மீர் முஸ்தபா உசேன் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தில் துணைவேந்தராக பணியாற்றினார். இவர் துணைவேந்தராக பணியாற்றிய காலத்தில் வாஷிங்டனில் 25.05.2008 முதல் 30.05.2008 வரை நடந்த கருத்தரங்கில் கலந்துக்கொள்வதற்கு விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்வதாகக்கூறி பல்கலைக்கழகம் சார்பில் ரூ 2,99,673 தொகையை ரொக்கமாக பெற்றுள்ளார். ஆனால் அவர் முதல் வகுப்பிற்கான பயணச்சீட்டை ரத்து செய்து இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தது தெரிய வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மீண்டும், மீர் முஸ்தபா உசேன் இங்கிலாந்து, நார்வே, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளில் நடந்த கருத்தரங்கில் கலந்துக்கொள்வதற்கு பல்கலைக்கழக சார்பில் ரூ 7,82,124 என்ற தொகையை விமான பயணத்திற்காக மோசடி செய்து பெற்றுள்ளார். சந்தேகம் அடைந்த சிலர் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி ஓம்பிரகாஷ் தலைமையில் விசாரிக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்பு துறை அறிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

எனவே மீர் முஸ்தபா உசேனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 24 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சென்னையில் பிரபலமான டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீர் முஸ்தபா உசேன் விமான டிக்கெட் முறைகேடு குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -