WTC புள்ளிப் பட்டியலில் சரிந்த இந்தியா…, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வீழ்ந்ததால் ஏற்பட்ட மாற்றம்!!

0
WTC புள்ளிப் பட்டியலில் சரிந்த இந்தியா..., ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வீழ்ந்ததால் ஏற்பட்ட மாற்றம்!!
WTC புள்ளிப் பட்டியலில் சரிந்த இந்தியா..., ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வீழ்ந்ததால் ஏற்பட்ட மாற்றம்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

WTC:

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணியானது, இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இந்த டிராபியில், முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் 64.06 சதவீதத்துடன் 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இழந்தன் மூலம், புள்ளிப் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, புதுப்பிக்கப்பட்டுள்ள புள்ளிப் பட்டியலின் அடிப்படையில், இந்தியா 64.06 சதவீதத்திலிருந்து 60.29%-மாக குறைந்து 2வது இடத்தையே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலக அளவில் புதிய உச்சம் அடைவதே இலக்கு”…, டோக்கியோ ஒலிம்பிக் சாதனையை முறியடித்த தமிழக வீரர்!!

இதில், ஆஸ்திரேலிய அணியானது, 66.67%-திலிருந்து 68.52%-மாக உயர்ந்து, முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி உள்ளது. மேலும், இந்த பட்டியலில், இலங்கை 53.33%, தென் ஆப்பிரிக்கா 52.38%, இங்கிலாந்து 46.97%-த்துடன் டாப் 5 இடத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் 38.1%, வெஸ்ட் இண்டீஸ் 37.5%, நியூசிலாந்து 27.27% மற்றும் பங்களாதேஷ் 11.11% ஆகிய சதவீதத்துடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here