UPI Pin நம்பர் இல்லாமல் இனி Transaction.., வந்தாச்சு புது அப்டேட்.., பயனர்கள் குஷி!!

0
UPI Pin நம்பர் இல்லாமல் இனி Transaction.., வந்தாச்சு புது அப்டேட்.., பயனர்கள் குஷி!!
UPI Pin நம்பர் இல்லாமல் இனி Transaction.., வந்தாச்சு புது அப்டேட்.., பயனர்கள் குஷி!!

இந்திய மக்களிடையே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கேற்ப வணிக வளாகங்களுக்கு செல்லுபவர்கள் GPay, Phonepe, Paytm என்ற செயலிகளை நம்பியே செல்கின்றனர். இப்படி ஒரு புறம் இருந்தாலும் UPI மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்கையில் சில நேரங்களில் நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டு கடைக்காரருக்கும் வாடிக்கையாளர்க்கும் சச்சரவுகள் ஏற்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தவிர்க்க Paytm நிறுவனம் “UPI Lite” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஒரு சில வினாடிகளில் பணப்பரிவர்த்தனை நடைபெற்று விடும். இதற்கு முதலில் உங்கள் Paytm செயலியை ஓபன் செய்து அதில் UPI Lite என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வாலாட்டில் ரூ.1 முதல் ரூ.1,999 வரை உங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை சேமித்து வைத்து கொள்ளலாம். இதன் பின்பு வெளியிடங்களில் வழக்கம் போல் QR ஸ்கேன் செய்து UPI Lite மூலம் PIN எண் இல்லாமல் பணம் செலுத்தலாம்.

அரசு பள்ளிகளில் வர இருக்கும் புதிய திட்டம்.., அதிகாரிகள் தீவிர ஆலோசனை!!

இதன்மூலம் பொது வெளிகளில் உங்களது PIN எண் கவனிக்கப்படுவது தவிர்க்கப்படும். மேலும் இந்த பணப் பரிவர்த்தனை எந்தவித தடையும் இல்லாமல் சில வினாடிகளில் நடந்து விடும். அதேபோல் இதில் இருந்து வங்கி கணக்கிற்கும் பணம் செலுத்தலாம். எனவே இனிமேல் UPI பயனர்கள் கடைகளில் பணம் செலுத்தி விட்டு காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here