அரசு பள்ளிகளில் வர இருக்கும் புதிய திட்டம்.., அதிகாரிகள் தீவிர ஆலோசனை!!

0
அரசு பள்ளிகளில் வர இருக்கும் புதிய திட்டம்.., அதிகாரிகள் தீவிர ஆலோசனை!!
அரசு பள்ளிகளில் வர இருக்கும் புதிய திட்டம்.., அதிகாரிகள் தீவிர ஆலோசனை!!

நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது குறித்து நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் வகுப்பறை

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி திறன்களை மேம்படுத்த ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையை தொடர்ந்து நெல்லை மாவட்ட அரசு பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த முக்கிய தேவையாக உள்ள இணையதள வசதியை அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்றவாறு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் வேகம் எடுக்கும் வைரஸ் காய்ச்சல்., மக்களுக்கு சுகாதாரத் துறை திடீர் வேண்டுகோள்!!

மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு இதுகுறித்த பயிற்சி வகுப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டது. அதோடு இந்த ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர்களை அழைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here