
இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
IND vs AUS:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கடந்த 1ம் தேதி முதல் இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 109 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 197 ரன்களும் எடுத்திருந்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணியானது, முதல் இன்னிங்ஸ் முடிவில் 88 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது இன்னிங்ஸில் இந்திய அணி, ஸ்கோரை உயர்த்தும் என எதிர்பார்த்த நிலையில், 163 ரன்களுக்குள்ளேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், 2வது பந்திலேயே உஸ்மான் கவாஜா அஸ்வின் சுழலில் டக் அவுட்டானார்.
மீண்ம் லெஜெண்ட் சரவணனின் தரமான செய்கை.., இதுல எத்தனை கோடி கொட்ட போகுதோ??
இதன் பின் களமிறங்கிய, டிராவிஸ் ஹெட் (49*) மற்றும் மார்னஸ் லாபுசாக்னே (28*) அதிரடியாக விளையாடி, 78 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று, 1-2 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் டிராபியை சமன் செய்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. மேலும், இந்திய அணியின் தொடர் வெற்றிக்கும் ஆஸ்திரேலிய முற்றுப்புள்ளி வைத்துள்ளது.