கொரோனாவை விட கொடிய வைரஸ் இந்தியாவில் பரவலா..? – வைரலாகும் தகவல்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸை விட கொடிய வைரஸ் பரவுவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவு..!

nipha virus
nipha virus

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசை விட அதிக கொடியதான நிஃபா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் புதிய 3 கொரோனவுக்கான அறிகுறிகள் அறிவிப்பு..!

தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வைரல்..!

தி நியூ யார்க் டைம்ஸ் செய்தி தொகுப்பு ஒன்று இணைக்கப்பட்டதில் நிஃபா வைரஸ் மிகவும் அரிதான மற்றும் கொடிய நோய் அது இந்தியாவில் பரவுகிறது என்று தலைப்பு கொண்டுள்ளது. இந்தியாவில் நிஃபா வைரஸ் பரவுகிறதா என ஆய்வு செய்ததில் இந்த தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. அந்த தொகுப்பு கடைசியாக ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் நிஃபா வைரஸ் பரவல் பற்றி உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நிஃபா வைரஸ் தொற்று பரவும் பட்சத்தில் அதனால் உயிரிழப்போர் விகிதம் 40 முதல் 75 சதவீதம் ஆகும். தற்சமயம் இந்தியாவில் நிஃபா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் உண்மையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here