தக்காளி தேவையில்லை., மன மணக்கும் வஞ்சரை மீன் குழம்பு., இப்படி ஒரு தடவை சமைத்து பாருங்க., சுவை வேற லெவல்!!

0
தக்காளி தேவையில்லை., மன மணக்கும் வஞ்சரை மீன் குழம்பு., இப்படி ஒரு தடவை சமைத்து பாருங்க., சுவை வேற லெவல்!!
தக்காளி தேவையில்லை., மன மணக்கும் வஞ்சரை மீன் குழம்பு., இப்படி ஒரு தடவை சமைத்து பாருங்க., சுவை வேற லெவல்!!

பொதுவாக அதிக ஊட்டச்சத்தை அள்ளி கொடுக்கும் மீன்களை நம் உணவில் சேர்த்து கொள்ளும் படி மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் பலர் தங்கள் வீடுகளில் sunday ஆகிவிட்டால் மீனை விரும்பி வாங்குகின்றனர். ஆனால் இந்த குழம்பு செய்வதற்கு முக்கியமான ஒரு பொருளாக இருக்கும் தக்காளி விலை தற்போது உச்சம் கண்டு இருக்கிறது. இதனால் தக்காளி இல்லாத மீன் குழம்பு வைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

 • வஞ்சரை மீன் – 1/2 கிலோ
 • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
 • சின்ன வெங்காயம் – 10
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • நல்லெண்ணெய் – 50 கிராம்
 • பச்சை மிளகாய் – 3
 • புளி கரைசல் – 2 கப்
 • வெந்தயம் – 1 டீஸ்பூன்
 • கடுகு – 1 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
 • மல்லி தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த வஞ்சரம் மீன் குழம்பு சமைப்பதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளவும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, போட்டு தாளித்து கொள்ளவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி விடவும்.

இதன் பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி அதோடு தேவையான அளவு உப்பையும் போட்டு கொதிக்க விடவும். மேலும் குழம்பு கொதித்தவுடன் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மீனை அதில் போடவும். அதன் பின் ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். இப்போது நமக்கு சுவையான தக்காளி இல்லாத மீன் குழம்பு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here