வேல்டு கப் 2022 குவாலிபயர்..! – வாழ்வா சாவா ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் WI வெற்றி..!!

0
வேல்டு கப் 2022 குவாலிபயர்..! - வாழ்வா சாவா ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் WI வெற்றி..!!

சர்வதேச T20 உலக கோப்பை தொடரின் தகுதி சுற்றில் ஜிம்பாப்வே அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி:

சர்வதேச T20 உலகக் கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் B பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தகுதி சுற்றில் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய விண்டீஸ் அணி 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை குவித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் நிக்கோலஸ் பூரன் 7 ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 45 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட்களையும், முசரபானி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 18.2 ஓவரில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக லூக் ஜாங்வே 29 ரன்களுக்கும், வெஸ்லி 27 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர்.

ஐசிசி தரவரிசை வெளியீடு…, நம்பர் 2வை தக்கவைத்த சூர்யகுமார்…, மற்ற இந்திய வீரர்களின் இடம் என்ன??

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்களையும் சாய்த்தனர். இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here