நைட் டைம் வாட்ஸ் ஆப் பாத்தா வீட்டுல திட்டுறாங்களா?? இனிமேல் அந்த பயம் இல்ல..! டார்க் மோட் வந்தாச்சு..!

0

வாட்ஸ் ஆப் இல் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த டார்க் மோட் வசதி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன்களில் வழங்கப்போவதாக அதிகாரபூர்வமாக வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் நியூ அப்டேட்

இன்றைய காலத்து இளைஞர்கள் குழந்தைகள் என அனைவரும் அதிகப்படியான நேரத்தை செலவிடுவது சமூக வலைத்தளங்களில் மட்டுமே. இதனால் பெற்றோர்களுக்கு குழந்தைகளை பற்றிய கவலை அதிகமாகவே இருக்கின்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதற்கான சோதனை தொடங்கப்பட்டது. இந்நிலையில் சோதனை வெற்றிகரமாக முடியவே இதனை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் 10 மற்றும் ஐஃபோன்

ஆண்ட்ராய்ட் 10 மற்றும் ஐஃபோன் களில் இதை ஆகிடிவேட் செய்ய வாட்ஸ் ஆப் ஐ அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்பு வாட்ஸ் ஆப் செட்டிங் இல் சென்று டிஸ்பிலே அண்ட் பிரைட்னஸ் ஆப்சனில் டார்க் மோட் ஐ கிளிக் செய்யவும். பின்பு ஆகிடிவேட் ஆகிவிடும்.

மற்ற ஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு

ஆண்ட்ராய்ட் 9 மற்றும் அதற்கு கீழ் உள்ள பயனாளர்களுக்கு இதை ஆகிடிவேட் செய்ய வாட்ஸ் ஆப் ஐ அப்டேட் செய்து கொள்ள வேண்டும். பின்பு வாட்ஸ் ஆப் இல் தீம் என்ற புதிய ஆப்சன் தோன்றி இருக்கும். அதை கிளிக் செய்து டார்க் மோட் ஐ பெறலாம்.

பயன்கள்


இந்த காலத்தில் மொபைல் ஐ அதிகம் பயன்படுத்துவதால் கண் பிரச்சனைகள் வர அதிக வாய்ப்பு இருக்கின்றது.எனவே இந்த டார்க் மோட் நம் கண்கள் சோர்வடையாமல் இருக்க உதவும். இதனால் பெற்றோர்கள் பயப்பட அவசியமும் இருக்காது. மேலும் இந்த அப்டேட் செய்வதன் மூலம் செல்போன் சார்ஜ் வேகமாக குறைவதை தடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here