3 மாத EMI கட்டவில்லை என்றால் இவ்வளவு பக்கவிளைவுகளா..? உஷாரா இருந்துக்கோங்க மக்களே..!

0
Salary
Salary

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக 3 மாதங்களுக்கு EMI எனப்படும் தவணைத்தொகை வசூலிப்பது ஒத்திவைக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

என்னென்ன கடன்கள்..!

ரிசர்வ் வங்கி அறிவித்த இந்த 3 மாதகால கெடுவானது வீட்டுக் கடன், தனி நபர் கடன், வாகனக் கடன் போன்ற கடன்கள் வங்கிகள் மட்டும் இல்லாமல் வீட்டுக் கடன் நிறுவனங்களில் இருந்து வாங்கி இருந்தால் கூட அவைகளுக்கு பொருந்தும். இந்த இ எம் ஐ ஒத்திவைப்பு குறித்த மெயில் & எஸ் எம் எஸ் வாடிக்கையாளர்களுக்குச் செல்லத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது எஸ்பிஐ, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச் டி எஃப் சி , ஆக்ஸிஸ் வங்கி போன்றவர்களும், இந்த இ எம் ஐ ஒத்திவைப்புக்கு அனுமதிக்கத் தொடங்கி உள்ளன. மேலும் 3 மாதம் EMI கட்டாமல் இருந்தால் எவ்வளவு கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கும், பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் எவ்வளவு செலுத்த வேண்டி இருக்கும் போன்ற விவரங்களை வங்கிகள் தயாரித்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட்டி அதிகரிக்கும்..!

3 மாதகாலம் EMI கட்டாமல் இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு வட்டிச்சுமை தான் அதிகரிக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக ஒருவர் 8.5 % வட்டிக்கு, 19 ஆண்டுகளில் (228) திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 50 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அவர் மாதா மாதம் 44,272 ரூபாய் EMI ஆக செலுத்திக் கொண்டு இருப்பார்.

ஒரு வேளை இவர் 3 மாத EMI ஒத்திவைப்பை பயன்படுத்திக் கொள்கிறார் என வைத்துக் கொள்வோம். ஆக மாதம் 35,000 ரூபாய்க்கு 3 மாதங்களுக்கு சுமாராக 1,05,000 ரூபாய் வட்டித் தொகை அசலுடன் சேர்ந்து வட்டி அதிகரிக்கும். அதாவது இனி 51.05 லட்சம் ரூபாய்க்கு வட்டி கட்ட வேண்டி இருக்கும். இந்த கூடுதல் சுமையைச் சமாளிக்க,

  • 44,272 ரூபாய் இ எம் ஐ தொகையையே செலுத்துவது என்றால் தவணையை 228 மாதத்தில் இருந்து 240 மாதங்களாக அதிகரிக்க வேண்டி இருக்கும். (அல்லது)
  • 45,202 ரூபாய் என இ எம் ஐ தொகையை அதிகரித்து அதே 228 மாதங்களுக்கு கடன் செலுத்த வேண்டி இருக்கும்.

3 மாதகால ஒத்திவைப்பை பயன்படுத்திக் கொள்வதை விட வழக்கம் போல ஒவ்வொரு மாதமும் கட்டி விடுவதே சிறந்தது என்பதே நிதர்சனமான உண்மை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here