அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!!

0
Raining
Raining

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

வானிலை ஆய்வு மையம் அறிக்கை:

மன்னர் வளைகுடா கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரில் சில பகுதிகளில் லேசான மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும். செங்கல்பட்டு,விழுப்புரம்,கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்குமா??

கடந்த 24 மணி நேர நிலவரப்படி, மணியாச்சியில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக வைப்பாரில் 12 செ.மீ., கடம்பூரில் 11 செ.மீ., கயத்தாறு, சீர்காழி, காரைக்கால், சித்தாரில் தலா 9 செ.மீ., தலைஞாயிறு, மயிலாடுதுறை, வாலிநோக்கம், நீடாமங்கலத்தில் தலா 8 செ.மீ., குடவாசல், மணல்மேடு,பாளையங்கோட்டையில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here