2020ம் ஆண்டில் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட பதிவு – நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி!!

0

2020ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டில் நாம் கடந்து வந்த பிரச்சனைகளை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. ஏனென்றால், கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலும் மக்கள் அலுவலகத்திற்கு செல்லாமல் முழு நேரத்தையும் வீட்டிலேயே செலவிட்டனர். எப்போது தான் அலுவலகம் திறக்கும் நாம் வேலைக்கு போக முடியும், இந்த 8 மாதமாக கொரோனா காரணமாக, வீட்டுக்குளேயே அடைந்து விட்டோம் என மக்க ஏங்கி தவிக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

2020ம் ஆண்டில் அணைத்து பிரச்சனைகளும் முடிந்து நமக்கு ஒரு புது புத்தாண்டாக 2021 அமையும் என மக்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது. 2020ம் ஆண்டில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன போட்டோக்கள், ட்வீட்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உளள்து. அதில் எது அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்றால், மாஸ்டர் படப்பிடிப்பின் போது நெய்வேலியில் தனக்கு ஆதரவு அளிக்க வந்த ரசிகர்களுடன் விஜய் பேருந்தின் மீது ஏறி எடுத்த செல்பி தான். அது லைக்குகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

ஹேமாவின் பெயரை சொல்லி ஏமாற்றும் வெண்பா – திருமணம் நடைபெறுமா??

விராட் கோஹ்லியின் மனைவியான அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். 2020ம் ஆண்டின் அதிக லைக் செய்யப்பட்ட ட்வீட் அதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here